அடேங்கப்பா.. தனுஷ் - சாய் பல்லவி ஆட்டத்துக்கு இப்படி ஒரு ரீச்சா..!! ரவுடி பேபி வேற லெவல் சாதனை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி-2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் வேற லெவல் சாதனையை செய்துள்ளது.

ரவுடி பேபி பாடலின் செம சாதனை | dhanush sai pallavi yuvan shankar raja's rowdy baby hits 800 million views

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி-2. சாய் பல்லவி, டொவினோ தாமல் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடலாக இது ஆனது.

இந்நிலையில் ரவுடி பேபி பாடல் தற்போது மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. தற்போது யூடியூபில் இப்பாடல் 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடல், இந்த இமாலய சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. இதையடுத்து இப்பாடல் விரைவில் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ரவுடி பேபி பாடலின் செம சாதனை | dhanush sai pallavi yuvan shankar raja's rowdy baby hits 800 million views

People looking for online information on Dhanush, Sai Pallavi, Yuvan Shankar Raja will find this news story useful.