capmaari 90 others

BEAST MODE ON : ENPT ரிலீஸுக்கு முன் அசுர அவதாரத்தில் தனுஷ் நடித்திருக்கும் புரொமோ வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Dhanush and Gautham Menon's ENPT new promo video released

நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி.ஜான், மனோஜ் பரமஹம்ஸா ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வழங்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட்டானது. சமீபத்தில், பலரது மனம் கவர்ந்த ‘மறுவார்த்தை பேசாதே’ காதல் பாடலின் வீடியோ புரொமோ வெளியானது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்பாடலை பிரபல சென்சேஷன் சிங்கரும், இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கவுதம் மேனனின் கிளாசிக் ஸ்டைலில் அசுரத்தனமாக சண்டையிடும் தனுஷின் புரொமோ கட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and Gautham Menon's ENPT new promo video released

People looking for online information on Dhanush, Enai Noki Paayum Thota, Gautham Menon, Megha Akash, Vels Film International will find this news story useful.