விஜய்யின் மாஸ்டர் - டபுள் ரோலில் கலக்க போகிறாரா தளபதி.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவரது வேடம் குறித்து புதிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

மாஸ்டர் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறாரா | clarification on dual role of vijay in lokesh kanagaraj's master

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து நமக்கு நெருக்கமான கோலிவுட் வட்டாரங்களிடம் இதுகுறித்து பேசினோம். மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும், அவர் ஜான் துரைராஜ் எனும் கதாபாத்திரத்தில் மட்டுமே தோன்றுவார் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர். இரட்டை வேடம் என தற்போது பரவி வரும் தகவல்கள் யாவும் புரளி மட்டுமே என கூறிகிறார்கள் நமது கோலிவுட்வாசிகள். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறாரா | clarification on dual role of vijay in lokesh kanagaraj's master

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.