Bigil USA mbl Others

தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இவ்வளவா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Box office Collection of Thalapathy Vijay and Atlee's Bigil

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் சென்னை சிட்டியில் முதல் நாளில் ரூ. 1.79 கோடியும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியாக்களில் ரூ 1.4 கோடியும் , திருச்சி, தஞ்சாவூர்  ஏரியாக்களில் ரூ. 2.6 கோடியும், மதுரை ஏரியாவில் ரூ.2.87 கோடியும்  கோயம்புத்தூர் ஏரியாவில் ரூ. 5.76 கோடியும், சேலம் ஏரியாவில் 2 கோடியும் செங்கல்பட்டு ஏரியாவில் 7.14 கோடியும் நார்த் மற்றும் சவுத் ஏரியாக்களில் ரூ. 3.48 கோடியும் வசூலாகியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் மொத்த வசூல்  ரூ. 27.04 கோடி என்று கூறப்படுகிறது. இதற்கு முன் தீபாவளியை முன்னிட்டு வெளியான  தளபதி விஜய்யின் மெர்சல் திரைப்படம் முதல் நாளில் ரூ. 22.78 கோடியும், சர்கார் ரூ. 31.62 கோடியும் வசூலாகியுள்ளது. இதில் சர்கார் திரைப்படம் சரியாக தீபாவளியன்று விடுமுறை தினத்தில் வெளியானது. விடுமுறையில்லாத தினத்தில் வெளியான பிகில் திரைப்படம் வசூலில் முதலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

Box office Collection of Thalapathy Vijay and Atlee's Bigil

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.