''பொய்ய எப்படி நம்புறாங்கனு தெரியல'' - அதிரடியாக வெளியேறிய பிக்பாஸ் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அபிராமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 

Bigg Boss fame Abhirami Venkatachalam deletes her account in TikTok | டிக்டாக்கில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிக்பாஸ் புகழ் அபிராமி

இதனையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அதிகம் கவனம் பெற்றன. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் டிக்டாக்கில் என் அக்கவுன்டை டெலிட் செய்து விட்டேன். மக்கள் பொய்யான ஐடியை நம்பி எங்களை வெறுப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இது போல ஏற்கனவே ட்விட்டரில் ஃபேக் அக்கவுண்ட் பிரச்சனை குறித்து குறிப்பிட்டிருந்தேன். தற்போது டிக்டாக்கிலும் இப்படி நடக்கிறது. எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இருக்கிறேன். காரணம் இன்ஸ்டாகிராமில் என் அக்கவுண்ட் வெரிஃபைட் செய்யப்பட்டது. ஆனால் அதில் இருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன் போதும்'' என்றார்.

Entertainment sub editor

Bigg Boss fame Abhirami Venkatachalam deletes her account in TikTok | டிக்டாக்கில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிக்பாஸ் புகழ் அபிராமி

People looking for online information on Abhirami Venkatachalam, Bigg boss, Tiktok will find this news story useful.