capmaari 90 others

மீண்டும் ஜாங்கிரியுடன் இணையும் சந்தானம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் மூன்று டேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் மக்கள் ம்த்தியில் மிகவும் பிரபலமான நடிகை மீண்டும் சந்தானத்துடன் இணைந்து நடிக்கிறார்.

Bigg Boss 3 Jangiri Madhumitha joins Santhanam's Dikkiloona

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'A1' திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றது.

இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், இயக்குநர் கண்ணன் இயக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளையும் முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ‘வித்தைக்காரன்’ என தலைப்பிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சந்தானத்தில் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.  'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான 'டிக்கிலோனா' என்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

இப்படத்தில் அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் இந்த படத்தில் நடிக்கிறார்.

இதன் மூலம் ஹர்பஜன் சிங் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் புதிதாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜாங்கிரி மதுமிதா மற்றும் சந்தானம் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த ஜாங்கிரி மதுமிதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடிக்கும் முதல் திரைப்படம் சந்தானம் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Jangiri Madhumitha joins Santhanam's Dikkiloona

People looking for online information on Dikkiloona, Harbhajan Singh, Jangiri Madhumitha, Santhanam will find this news story useful.