மணிரத்னம் - ஐஸ்வர்யா ராயின் பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

Ashwin to play a Special Role in Maniratnam's Ponniyin Selvan

இந்த படத்தில் ஜஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.  இந்த படத்துக்கு அபியும் நானும், சர்வம் தாளமயம் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த குமாரவேல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் 'மங்காத்தா', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்', 'பாலகுமாரா', 'ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். அதில், ''கல்லூரி மாணவனாக 'ஆயுத எழுத்து' படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Ashwin to play a Special Role in Maniratnam's Ponniyin Selvan

People looking for online information on Aishwarya Rai Bachchan, Ashwin Kakumanu, Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.