''டியர் மோடி, இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று சொல்லுங்கள் ப்ளீஸ்'' - பிரபல இயக்குநர் சாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு கட்டமாக நடைபெற்றுவந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக அரசு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Anurag Kashyap question PM Narendra Modi about BJP Workers attitude

இதற்கு பல்வேறு பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார். ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ''அன்பான மோடி அவர்களே. உங்களுடைய வெற்றிக்கு எங்களின் வாழ்த்துகள். எனினும், உங்கள் எதிர்ப்பாளனாக இருக்கும் என்னுடைய மகளை மிரட்டி தங்களின் வெற்றியைக் கொண்டாடும் தொண்டர்களை எப்படிச் சமாளிப்பது என்றும் சொல்லுங்களேன் ப்ளீஸ்!" என ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு இயக்குநர் அசோக் பண்டிட் என்பவர்,  இந்த ட்விட்டர் பக்கம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது போன்று உள்ளது. ஏனெனில் இது ட்விட்டரில் இல்லை. யாராவது வேண்டாத நபர்கள் இதனை உருவாக்கியுள்ளது போன்று தோன்றுகிறது' என்றார்.  அதற்கு ''அந்த பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடவும். டிவிட்டரில் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Anurag Kashyap question PM Narendra Modi about BJP Workers attitude

People looking for online information on Anurag Kashyap, BJP, Narendra Modi will find this news story useful.