என்னது மறுபடியும் குக்கரா..?! ஆங்கர் மணிமேகலையை தொடரும் குக்கர் கதை இது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை குக்கர் வெடித்த நிகழ்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

ஆங்கர் மணிமேகலை வீட்டில் மீண்டும் குக்கர் | anchor manimegalai responds in instagram over cooker blast incident.

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக கலக்கியவர் மணிமேகலை. இவரின் துறுதுறு பேச்சுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இவர் அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இது மட்டுமின்றி, பட்டிமன்றங்கள் மற்றும் கல்லூரி விழாக்களிலும் மணிமேகலை கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் குக்கர்  வெடித்து சிதற, அதுகுறித்து இவரது கணவர் ஹுசைன் பதிவிட்டு வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் அவர் இதுகுறித்து பதிலளித்துள்ளார். இதுகுறித்து ரசிகர் ஒருவர் புது குக்கர் வாங்கிட்டீங்களா அக்கா என கேள்வி கேட்டதுக்கு, 'வாங்கிட்டேன், வாங்கி குக் அக்காகிட்ட கொடுத்துட்டேன். நான் இனி அந்த பக்கம் போக மாட்டேன்' என பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர், நீங்க மட்டும் பக்கத்து வீட்டுல இருந்தா, எங்க வீட்டுலயே இருக்க மாட்டேன்க்கா என சொல்ல, அதற்கு ரிப்ளை அடித்த மணிமேகலை, 'என் வீட்டு குக்கர் ப்ளாஸ்ட்ல உயிரை விடுறதுக்கு நீங்க உங்க வீட்டிலயே இருக்கலாம்' என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

ஆங்கர் மணிமேகலை வீட்டில் மீண்டும் குக்கர் | anchor manimegalai responds in instagram over cooker blast incident.

People looking for online information on Anchor Manimegalai, Cook with comali, Cooker Blast, Manimegalai VJ will find this news story useful.