அமலாபால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆடை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

Amala Paul Aadai Movie Sneak Peek Video Out Now

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜுலை 19-ம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் பண விவகாரம் தொடர்பான பிரச்னையில் சிக்கியதால் நேற்று வெளியானது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடம் 31 நொடி நீளமுள்ள இந்த வீடியோவில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அமலாபால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ ! வீடியோ

Amala Paul Aadai Movie Sneak Peek Video Out Now

People looking for online information on Aadai, Amala Paul will find this news story useful.