விக்ரமின் 'கோப்ரா'வையும் விட்டு வைக்காத கொரோனா! வருத்தத்தில் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 7 ஸ்கிரீன் தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் கோப்ரா.

விக்ரமின் கோப்ரா கொரோனாவால் தடைபட்டது | Ajay ganamuthu informed corona virus affects A.R.Rahman, Vikram Movie Cobra

இது விக்ரம் நடிக்கும் 58வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல். கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து கோப்ரா பற்றிய எதிர்பார்ப்பை  ரசிகர்களிடையே அதிகளவில் எகிறவிட்டிருந்தது.

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் வெளிநாட்டிற்கு செல்லவோ மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கான அனைத்து பயணத்தையும் ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நம்ம விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கோப்ரா படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து சூட்டிங்கை பாதியிலேயே பேக் செய்துவிட்டு இந்தியா திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இதனை மிகவும் சோகத்துடன் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் போங்கையா நீங்களும் உங்கள் கொரோனாவும் என தெரிவித்துள்ளார்.  

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விக்ரமின் கோப்ரா கொரோனாவால் தடைபட்டது | Ajay ganamuthu informed corona virus affects A.R.Rahman, Vikram Movie Cobra

People looking for online information on Ajay Gnanamuthu, AR Rahman, Cobra, Coronavirus, Vikram will find this news story useful.