Fakir Others Banner USA

ஓவியா, மும்தாஜ் போல இவருக்குமா..?- ஒரே நாளில் ஆர்மி உருவாக்கிய பிக் பாஸ் ஃபாலோயர்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நேற்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி மக்கள் மனதில் கூடுதல் கவனம் ஈர்த்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது.

After Oviya and Mumtaz, this BB3 contestant gets the 'Army' tag!

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஓவியா. அவர் செய்த ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்ததுடன் ஆர்மி உருவானது.

அவரைத் தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது சீசனில் நடிகை மும்தாஜிற்கு ஆர்மியை உருவாக்கி அவரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில், நேற்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் அதிகளவில் ஆர்மிகள் உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா, மக்கள் மனதை வென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பேசி வரும் நிலையில், லொஸ்லியாவுக்காக ஆர்மி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அதேபோல், நடிகை ஷெரின், சாக்ஷி அகர்வால், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோரும் ரசிகர்களை கவர அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

எலிமினேஷன் ரவுண்ட் ஆரம்பித்து, சில வாரங்கள் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரியின் மூலம் மேலும் சில பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Oviya and Mumtaz, this BB3 contestant gets the 'Army' tag!

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Losliya, Losliya Army will find this news story useful.