மாஸ்டர், சூரரைப் போற்று வரிசையில் பிக்பாஸ் ஸ்டார்ஸ் படம் - ஒரு செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பேசியது  செம வைரலானது. அதனைத் தொடர்ந்து அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  8 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பமில் அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு விருப்பமானதாக அமைந்துள்ளது.

மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'மாஸ்டர்' மற்றும் 'சூரரைப் போற்று' படங்களின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', ஜெயம் ரவியின் 'பூமி' உள்ளிட்ட படங்களின் இசை உரிமையும் சோனி மியூசிக் நிறுவனத்திடம் உள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2 ஸ்டார்ஸான யாஷிகா ஆனந்த், ரித்விகா, உள்ளிட்டோருடன் யூடியூப் பிரபலங்கள் விஜய்குமார், ஹரிஜா, கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' திரைப்படத்தின் இசை உரிமையையும் சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் சூரரைப் போற்று படங்களுக்கு பிறகு பிக்பாஸ் ஸ்டார்ஸின் ஓம்ஓம் பட இசை உரிமையை சோனி மிய�

People looking for online information on Bigg boss, Master, Om Om, Sony Music, Soorarai Pottru will find this news story useful.