ஏஞ்சலிடம் இருந்து மெசேஜ் வந்தது - சாய்பல்லவியின் மெசேஜ் குறித்து பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெவ்வேறு வயதில் தோன்றும் காதல் உணர்வுகளை பேசிய 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படம்  கடந்த வருடம் டிசம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் இயக்குநர் ஹலீதா ஷமீமிடம் தெரிவித்து வருகின்றனர்

Actress Sai Pallavi praises Sillu Karuppatti director Halitha Shameem | சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமீமா புகழ்ந்து தள்ளிய சாய் ப

அதன் ஒரு பகுதியாக தற்போது இயக்குநர் ஹலீதா ஷமீம் ட்வீட் செய்துள்ளார். அதில், ''இந்த ஊரடங்கு எனக்கு பல நேரங்களில் மன அழுத்தம் தந்தது, இறுதியாக ஏஞ்சலிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது'' என்று ஸ்கீரீன் ஷாட் பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகை சாய் பல்லவி, ''சில்லுக்கருப்பட்டி பார்த்த பிறகு நானும் எனது பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தோம். உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நல்ல இதமான உணர்வுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி. இந்தமாதிரி நிறைய  படங்கள் செய்யுங்கள்'' என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சில்லுக்கருப்பட்டி'. 4 மாறுபட்ட காதல் கதை கொண்ட இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய்கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Entertainment sub editor

Actress Sai Pallavi praises Sillu Karuppatti director Halitha Shameem | சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமீமா புகழ்ந்து தள்ளிய சாய் ப

People looking for online information on Halitha Shameem, Sai Pallavi, Sillu Karupatti will find this news story useful.