Max hair

ஜெர்ஸி நம்பர் என்ன தெரியுமா?- தளபதி 63-ன் தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

Actress Indhuja's Jersy number is 63 in Vijay's Thalapathy 63

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஜாக்கி ஷ்ரோஃப், ஆனந்த ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் ரத்னகுமார் இயக்கிய ‘மேயாதமான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா, தளபதி 63 படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நடிகை இந்துஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ட்வீட்டை ரிட்வீட் செய்துள்ள இயக்குநர் ரத்னகுமார், “வாழ்த்துக்கள் சுடர். அருமை #Thalapathy63. And the Jersey no is 63. வெறித்தனம்” என ட்வீட் செய்துள்ளார். தளபதி விஜய் நடிக்கும் 63வது திரைப்படமான ‘தளபதி 63’ படத்தில் நடிகை இந்துஜாவிற்கு ஜெர்ஸி நம்பர் 63 கிடைத்திருப்பது அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

Actress Indhuja's Jersy number is 63 in Vijay's Thalapathy 63

People looking for online information on AGS Entertainment, Atlee, Indhuja, Nayanthara, Thalapathy 63, Vijay will find this news story useful.