மாஸ்டர் ஆடியோ லான்ச் : தளபதி விஜய் 'மாஸ்டர்' படக்குழு உடன் நெகிழ்ச்சி.. தீயாய் பரவும் போட்டோ..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தளபதி விஜய்க்கு மாஸ்டர் படக்குழு உடன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் Actor Vijay Makes An Emotional Rememberance with Master team

இதில் தளபதி விஜய் என்ன பேச போகிறார், இந்த முறை என்ன குட்டி கதை சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்க. தளபதி மேடையை தெறிக்க விட்டார். ஆரம்பம் முதலே மிக ஆர்வமாக இருந்த விஐய் தன் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் கொடுத்தார். குறிப்பாக அனிருத், சாந்தனு உடன் சேர்ந்து அவர் ஆடிய நடனம் வேற லெவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் அவர் செய்திருக்கும் மற்றோரு காரியம் கூட செம மாஸா ஆக இருந்தது. ஆம் படக்குழு உடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட செல்பி தெறி லெவல். சமீபத்தில் மாஸ்டர் ஷூட்டிங் முடிந்த பொழுது அவர் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி செம வைரல் ஆனது. அதே போல் மீண்டும் படக்குழு உடன் அவர் எடுத்திருக்கும் இந்த செல்பி செம வைரல் ஆகிறது. படத்தில் அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி இந்த படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய்க்கு மாஸ்டர் படக்குழு உடன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் Actor Vijay Makes An Emotional Rememberance with Master team

People looking for online information on Master, Master Audio Launch, Vijay will find this news story useful.