அது பிக்பாஸ் வீடா?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?! பிரபல நடிகருக்கு வந்த டவுட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நடிகர் சதீஷுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துள்ளது.

Actor Sathish Tweet About Bigg Boss Vanitha Indirectly

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல்வேறு பிரபலங்களும் ரசித்து வருகின்றனர். நடிகர் சதீஷ் பிக்பாஸின் கடந்த சீசன்களையும் பார்த்து ரசித்தார். இதுதொடர்பாக ஜூலி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் குறித்து ட்வீட் செய்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் பார்த்து வருகிறார் நடிகர் சதீஷ்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா ஆர்மியில் தன்னை இணைத்துக்கொண்டார். லாஸ்லியாவுக்கு ஆதரவாக தாத்தா ஒருவரின் வீடியோவையும் வெளியிட்டார். லாஸ்லியாவுக் ஆதரவாக அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தற்போது ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் சதீஷ். அதில் அது பிக்பாஸ் வீடா அல்லது அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா என கேட்டுள்ளார்.

மேலும் அந்த ஒருத்தர் யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா என்று கூறிய சதீஷ், நான் ஒன்றும் கூறவில்லை என்பதைபோல் வாயை மூடிக்கொள்ளும் ஈமோஜியையும் வெளியிட்டுள்ளார்

Actor Sathish Tweet About Bigg Boss Vanitha Indirectly

People looking for online information on Bigg Boss 3 tamil, Sathish will find this news story useful.