கொரோனா : நடிகர் கமல்ஹாசன் கேள்வி - " இன்னும் அப்படி செய்யாதது ஏன்..?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த கால வரையறை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னரே பிரதமர் இது பற்றி அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொரோனா பற்றி நடிகர் கமல்ஹாசன் கேள்வி Actor Kamal hassan questions Chief minister edapadi palanisamy on corona issue

தமிழக அரசு சார்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சீக்கிரம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனினும் மற்ற மாநிலங்கள் பலவும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் இது பற்றி நடிகர் கமல்ஹாசன் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "மற்ற மாநில முதல்வர்கள் தாமாக ஊரடங்கை நீட்டித்து கொண்டிருக்கும் போது, தாங்கள் மட்டும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?" என்று முதல்வரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா பற்றி நடிகர் கமல்ஹாசன் கேள்வி Actor Kamal hassan questions Chief minister edapadi palanisamy on corona issue

People looking for online information on Corona, Covid19, Edapadi Palanisamy, Kamal Haasan, Lockdown will find this news story useful.