தளபதியின் மாஸ்டர், பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்ஸ்... - ''ஓபனிங் சாங்ல தளபதி கூட டான்ஸ்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பேசியவைகள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக தளபதி விஜய், விஜய் சேதுபதியை பார்த்து நண்பா என்று சொன்னதும் அவருக்கு முத்தம் கொடுத்ததும் ஹைலைட்டாக அமைந்தது.

தளபதியின் விஜய்யின் மாஸ்டர் குறித்து நடிகர் சிபி சொன்ன சீக்ரெட்ஸ் | Actor Ciby shares a secret about Thalapathy Vijay Master

இசை வெளியீட்டு விழா, மற்றும் பாடல்கள் ஆகியவற்றிற்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நடிகர் சிபி, தனது மாஸ்டர் பட அனுபவம் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த படத்தில் ஓபனிங் சாங்கான வாத்தி கமிங் பாடலில் தளபதியுடன் டான்ஸ் ஆடவேண்டும். இயக்குநர் லோகேஷ், நல்லா பிராக்டிஸ் பண்ணிக்கோ என்று சொன்னார். டான்ஸ் ஆடும் போது, தளபதியிடம் எனக்கு டான்ஸ் வராது என்று சொன்னேன். அதற்கு அவர், நல்லா தான ஆடுற பண்ணு என்றார்.

இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் சிபி அண்ட் கேங் என்று என் பெயரை நியாபகம் வைத்து சொன்னார். சூப்பர் ஸ்டார்னா அதாங்க காரணம். அதான் அவர அவ்ளோ கோடி பேருக்கு பிடிக்குது. அவர் என் பெயரை சொல்லிருக்க வேண்டியதே இல்ல.

அவரு கூட நடிச்சிட்டு இருப்போம். திடீர்னு அவர் ஒன்னு பண்ணுவாரு. அவர் ஃபேஸ் மாறும். முக்கியமா எமோஷன் காட்சிகள்ல பிரிச்சு மேஞ்சுருக்காரு. அத பார்க்கும் போது நமகக்கு அழுகை வரும். பெஸ்ட் ஆக்டர்'' என்றார்.

தளபதியின் மாஸ்டர், பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்ஸ்... - ''ஓபனிங் சாங்ல தளபதி கூட டான்ஸ்...'' வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

தளபதியின் விஜய்யின் மாஸ்டர் குறித்து நடிகர் சிபி சொன்ன சீக்ரெட்ஸ் | Actor Ciby shares a secret about Thalapathy Vijay Master

People looking for online information on Ciby, Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.