ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ ஸ்னீக் பீக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாட்ச்மேன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

A Sneak Peek video from G.V.Prakash's Watchman has been released

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'வாட்ச்மேன். ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாய் ஒன்று பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சஸ்பன்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இடம்பெறும் விறுவிறுப்பான சில நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்.12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்திருந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள்மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 

ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ

A Sneak Peek video from G.V.Prakash's Watchman has been released

People looking for online information on A L Vijay, GV Prakash, Watchman, Yogi Babu will find this news story useful.