கமலின் இந்தியன் 2 விபத்து - பலியான உதவி இயக்குநர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமலின் இந்தியன் 2 விபத்தில் பலியான கிருஷ்ணா எனும் உதவி இயக்குநர் குறித்து புதிய தகவல் தெரியவந்துள்ளது.

கமல் இந்தியன் 2 விபத்தில் கார்டூனிஸ்ட் மதன் மருமகன் க்ருஷ்ணா பலி | cartoonist madhan's son in law died in kamal's indian 2 accident

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைக்கா ப்ரொடக்‌ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று விபத்து ஏற்பட்டு மூவர் பலியாகினர். இதில் உதவி இயக்குநராக இருந்த கிருஷ்ணாவும் ஒருவர். இவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏ.எல்.விஜய்யுடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து கமலின் விஸ்வரூபம் படத்தில் வேலை செய்துள்ளார். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த இவர், நேற்று நடந்த விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கமல் இந்தியன் 2 விபத்தில் கார்டூனிஸ்ட் மதன் மருமகன் க்ருஷ்ணா பலி | cartoonist madhan's son in law died in kamal's indian 2 accident

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar will find this news story useful.