ஒரு கதை சொல்லட்டா சார்- மக்கள் செல்வன் படத்தின் ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து பரவிய தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

YNOT Studios clarifies about telugu remake of Vijay Sethupathi's Vikram Vedha

கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பதாக செய்திகள் பரவின. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான என்.டி.ஆர் பாலகிருஷ்ணா மற்றும் ராஜசேகர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனை ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த  YNOT Studios மறுத்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள YNOT Studios, 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் உரிமம் தங்களிடமே இருப்பதாகவும், ரீமேக் குறித்த தகவல் தங்கள் மூலம் வந்தால் மட்டுமே அது அதிகாரபூர்வமான செய்தி என்றும், அதுவரை இதுபோன்ற வதந்திகளை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டாம் என்றும் YNOT Studios நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

YNOT Studios clarifies about telugu remake of Vijay Sethupathi's Vikram Vedha

People looking for online information on Madhavan, Pushkar Gayathri, Vijay Sethupathi, Vikram Vedha, Vikram Vedha Telugu Remake, Ynot Studios will find this news story useful.