லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தின் ஜிந்தாகோ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

New promo video of the song Jinthako from Nayanthara's Airaa is out now

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்-நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச்.28ம் தேதி வெளியாகவுள்ளது.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிந்தாகோ’ பாடல் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ரிலீசையொட்டி, அதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிரியங்கா ரவிந்தரன் கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துடன் ரிலீசாகவுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாரின் ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ இதோ..! வீடியோ

New promo video of the song Jinthako from Nayanthara's Airaa is out now

People looking for online information on Airaa, Jinthako Video Promo, Nayanthara, Sarjun KM, Yogi Babu will find this news story useful.