KHS கேம்: ரூம் போட்டு யோசித்த காஜல், டாஸ்கில் சிக்கிய விஜே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Kajal Aggarwal plays Kiss Me Hug Me slap Me with VJ Nikki

பாலிவுட்டில் நடிகைகங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘குயீன்’ திரைப்படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இதைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இது தவிர நடிகர் ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ என்ற படத்திலும் காஜல் கர்வால் நடித்து வருகிறார். இந்த படத்திற்காககாஜலகர்வால் மேற்கொண்ட ஸ்டண்ட் முயற்சிகள் சில சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விஜே நிக்கியுடன் நடிகை காஜல் அகர்வால் ஜாலியாக விளையாடினார். அப்போது, விஜய் நடித்த படங்களில் இருந்து டயலாக் பேசி காண்பித்ததுடன், விஜே நிக்கிக்கு அவர் அளித்த டாஸ்க்குகள் வேற லெவலில் இருந்தன.

KHS கேம்: ரூம் போட்டு யோசித்த காஜல், டாஸ்கில் சிக்கிய விஜே வீடியோ

Kajal Aggarwal plays Kiss Me Hug Me slap Me with VJ Nikki

People looking for online information on Indian 2, Kajal Aggarwal, KHS Game, Paris Paris, VJ Nikki will find this news story useful.