Lucifer All Banner USA
Super Deluxe All Banner USA

என் ரோல் என்ன? மிர்ணாளினியின் சூப்பர் டீலக்ஸ் சீக்ரெட் ரோல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் ‘டப்ஸ்மாஷ்’ மூலம் புகழ்பெற்ற மிர்ணாளினி ரவி தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

Dubsmash fame Mirnalini revealed about her secret role in Vijay sethupathi's Super Deluxe

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும், டப்ஸ்மேஷ் மூலம் புகழ்பெற்ற மிர்ணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மிர்ணாளினியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து Behindwoods-க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தனி ட்ராக் என்றும், இது படத்தில் மிக முக்கியமான ரகசியமான கதாபாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுவிதமான இந்த ரோலில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். சூப்பர் டீலக்ஸ் படத்தின் தனது கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் இன்று (மார்ச்.29) வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

என் ரோல் என்ன? மிர்ணாளினியின் சூப்பர் டீலக்ஸ் சீக்ரெட் ரோல் வீடியோ

Dubsmash fame Mirnalini revealed about her secret role in Vijay sethupathi's Super Deluxe

People looking for online information on Mirnalini Ravi, Samantha, Super Deluxe, Thiagarajan Kumararaja, Vijay Sethupathi will find this news story useful.