படப்பிடிப்பில் ஆரவை தாக்கிய யானை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 வெற்றியாளர் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜபீமா’ திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Bigg Boss Arav was tossed by an Elephant in ‘Raja Bheema’

எஸ்.மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மனிதந் யானை இடையிலான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஆரவ்-க்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார்.

இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஓவியா நடிக்கவிருப்பதுடன் ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வந்த ‘ராஜபீமா’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இது குறித்து இயக்குநர் நரேஷ் கூறுகையில், அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது. ஸ்க்ரிப்டில் எழுதும் போது பல விஷயங்கள் அற்புதமாக இருக்கும், ஆனால் படப்பிடிப்புகளில் எதிர்ப்பார்க்காத அனுபவங்களை தந்த்து. யானையுடன் நட்பாக பழகியிருந்த போதிலும், எதிர்ப்பாராத விதமாக ஆரவ்-விற்கு அடிப்பட்டது கஷ்டமாக இருந்தது எனக் கூறினார்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து வருவதாகவும், கோடை விடுமுறைக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதகாவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Arav was tossed by an Elephant in ‘Raja Bheema’

People looking for online information on Aarav, Elephant, Oviya, Raja Bheema will find this news story useful.