‘பாண்டா கரடிகளிடம் சிக்கிக் கொண்ட சிறுமி’.. பதறவைக்கும் காட்சிகள்!

Home > News Shots > தமிழ் news
By |

சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடிகள் இருக்கும் பகுதியில் சிறுமி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

‘பாண்டா கரடிகளிடம் சிக்கிக் கொண்ட சிறுமி’.. பதறவைக்கும் காட்சிகள்!

சீனாவில் செங்டு என்கிற பகுதியில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள பாண்டா கரடிகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரை தாண்டி பாண்டாக்கள் இருக்கும் பகுதியில் விழுந்துள்ளாள்.

இதை பார்த்ததும் சிறுமியின் அருகில் பாண்டா கரடிகள் மெதுவாக செல்கின்றன. உடனே பூங்காவில் வேலை பார்க்கும் ஊழியர் ஒரு கம்பை வைத்து சிறுமியை மீட்க முயற்சி செய்துள்ளார். அது பயனளிக்காததால் தனது கையை கொடுத்து சிறுமியை மேலே தூக்கியுள்ளார்.

ஆனால் அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டா கரடிகள் சிறுமியை எவ்வித துன்புறுத்தலும் செய்யவில்லை. மேலும் மிகுந்த சிரமத்துடன் துரிதமாக சிறுமியை காப்பாற்றிய ஊழியரை அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

PANDA, CHILD, ANIMALS, VIRALVIDEO