எல்லாம் ஓகே சார். ஹெல்மெட் போட்டுக்கொண்டு மொபைல் பேசும்போதுதானே , பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி ஆறுமுகம் உட்பட பலரின் செல்போனும் வெடித்துள்ளன? அப்போது சார்ஜரில் கூட போன் இணைக்கப்பட்டிருக்கவில்லையே? என்கிற கேள்வி எழலாம். இதற்குக் காரணம் சார்ஜரின் ரகம். ஒரு செல்போனுக்கான குறிப்பிட்ட வோல்டேஜுக்கு குறைவாகவோ, அதிகமாகவோ வோல்டேஜ் இருக்கும் சார்ஜர்களை பயன்படுத்தினால் இப்படியான அசம்பாவிதங்கள் நிகழும். ஆக, செல்போனுக்கான சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துவது யாவருக்கும் நலம்.