2 வருட தடைக்குப்பின் மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள்-பிரபலங்கள் உட்பட பலரும் சென்னை அணியை வாழ்த்தி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களுக்கும், இன்று பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் அளிக்கப்பட்டன.
அதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்...
நடப்பு ஐபிஎல் தொடரில் 725 ரன்களைக் குவித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஆரஞ்சு தொப்பியை தனதாக்கிக்கொண்டார். இதுதவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகையும் அவருக்கு அளிக்கப்பட்டது.